இந்தியாவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நோய் தொற்று பாதிப்பு! காரணம் என்ன?

0
71

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நோய்தொற்று நாடு முழுவதும் பரப்பி வருகிறது கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல உலகநாடுகள் மத்தியில் பரவி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இதன் காரணமாக உலக நாடுகளிடையே பொருளாதார மந்தநிலை மிகவும் அதிகமாக காணப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் தற்போது மெல்ல, மெல்ல, குறைந்து வருகிறது. இந்த நிலையில், இந்த நோய்த்தொற்று பரவல் தொடர்பான அறிவிப்புகளை மாநில அரசின் சார்பாக மாநில சுகாதாரத்துறையும், மத்திய அரசின் சார்பாக மத்திய சுகாதாரத்துறையும், நாள்தோறும் வெளியிட்டு வருகின்றன.

அதன்படி இந்திய அளவிலான பாதிப்புகள் தொடர்பான தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில அளவிலான நோய்தொற்று நிலவரம் தொடர்பான விவரங்களை அந்தந்த மாநில சுகாதார துறை அமைச்சகமும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தியாவில் தினசரி நோய் தொற்று பாதிப்பு தொடர்பான தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.

அந்த தகவலினடிப்படையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,086 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக நோய் தொற்று ஆயிரத்திற்கு கீழே பதிவான நிலையில் தற்சமயம் நோய் தொற்று பாதிப்பு மீண்டும் சற்று அதிகரித்திருக்கிறது.

அதாவது நேற்றைய தினம் 795 பேருக்கும், நேற்று முன்தினம் 913 பேருக்கும், நோய்த்தொற்று இந்திய அளவில் உருவானதாக சொல்லப்படுகிறது.

எனவே இந்த தகவலின் அடிப்படையில் இந்தியாவில் நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக, பாதிப்படைந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,30,30,925 என அதிகரித்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து 1,198 பேர் விடுபட்டிருக்கிறார்கள் இதன் காரணமாக, இந்தியாவில் நோய்களிலிருந்து விடுபட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,24,97,567 என்று அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக, பாதிக்கப்பட்டோரின் 11,871 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என சொல்லப்படுகிறது.

இருந்தாலும்கூட நோய்த்தொற்று தாக்குதல் காரணமாக, கடந்த 24 மணிநேரத்தில் பேர் 71பலியாகி இருக்கிறார்கள் இதன் காரணமாக, நாட்டில் நோய் தொற்றால் பலியானோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 5, 21,487 ஆக அதிகரித்திருக்கிறது.

அதேசமயம் நாடுமுழுவதும் இதுவரையில் 185,4,11,569 தடுப்பூசி தவணைகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.