நாட்டில் சற்றே எகிறிய நோய் தொற்று பாதிப்பு!

0
77

இந்தியாவில் கடந்த 2 வருடகாலமாக நோய் தொற்று பாதிப்பு கடுமையாக அதிகரித்து வந்த சூழ்நிலையில், தற்சமயம் இந்த நோய்க்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவில் அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் முடுக்கிவிடப்பட்டது இதன் காரணமாக, தற்போது இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் வெகுவாக குறைந்திருக்கிறது.

இந்த நிலையில், நாட்டில் நோய் தொற்று பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டிருக்கிறது. அதனடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,581 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

இது நேற்றைய நோய்தொற்று பாதிப்பான 1549 ஐ விட அதிகம்.இதன் காரணமாக, நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,30,10,971 என்று அதிகரித்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றிலிருந்து 2741 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதன் காரணமாக, நாட்டில் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,24,70,515 என்று அதிகரித்திருக்கிறது.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக நோய்த் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களில் 23,913 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இருந்தாலும் நோய்த்தொற்று தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் பலியாகியிருக்கிறார்கள் இதனால் நாட்டில் நோய் தொற்றுக்கு பலியானோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5,16,543 ஆக அதிகரித்திருக்கிறது.

அதேநேரம் நாடு முழுவதும் இதுவரையில் 181,56,1,944 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.