Connect with us

Breaking News

இந்தியாவில் அதிரடியாக குறைந்த நோய்த்தொற்று பரவல்!

Published

on

கடந்த 3 வருட காலமாக இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் மிகவும் அதிகரித்து வந்தது இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். முழுமையான ஊரடங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது மத்திய அரசு.

இதற்கிடையில் இந்த நோய்த் தொற்றுகளுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்து அந்த தடுப்பு ஊசியை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கான ஏற்பாட்டையும் மத்திய அரசு செய்து வந்தது.இந்த தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட அதன் விளைவாக இந்தியாவில் மெல்ல, மெல்ல, நோய்த்தொற்று பரவல் குறையத் தொடங்கியது.

Advertisement

இதனால் 3 வருடத்திற்கு பிறகு இந்தியாவில் மெதுமெதுவாக இயல்பு நிலை திரும்ப தொடங்கியது.இந்தியாவில் வெகுவாக நோய்த்தொற்று பரவல் குறைந்து வந்த சூழ்நிலையில், தமிழக அளவில் பார்த்தோமானால் நோய்த்தொற்று பரவல் முற்றிலுமாக முடிவை நெருங்கிவிட்ட சூழ்நிலையில் இருந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் நாட்டில் தினசரி 108 பாதிப்பு குறித்த விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதனடிப்படையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,549 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1761 விட குறைவு என சொல்லப்படுகிறது.

Advertisement

இதன் காரணமாக, நாட்டில் நோய் தொற்று பாதிப்பு காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,030,9,390 என அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து 2652 பேர் குணமடைந்திருக்கிறார்கள்.

இதனால் இந்நாட்டில் கொரோனாவிலிருந்து நலம் பெற்றோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,24,67,774 என்று அதிகரித்திருக்கிறது. நாடு முழுவதும் நோய்த்தொற்று காரணமாக, பாதிப்படைந்தவர்களில் 25,106 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என சொல்லப்படுகிறது.

Advertisement

இருந்தாலும் நோய் தொடர் தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதனால் நாட்டில் நோய் தொற்றால் பலியானோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 5,16,510 என்று அதிகரித்திருக்கிறது. அதேசமயம் நாடு முழுவதும் இதுவரையில் 181,24,97,303 மக்களுக்கு தடுப்பூசி தவளைகள் செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement