நாட்டின் மீண்டும் அதிகரிக்கும் நோய் தொற்று! பாதிப்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

0
86

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டது அன்றிலிருந்து இன்று வரை அந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

தொடக்கத்தில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைக்கு சரிவர ஒத்துழைப்பு வழங்காத பொதுமக்கள் பின்பு மத்திய, மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தொடங்கினார்கள்.

தொடக்கத்தில் இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய ,மாநில அரசுகள் மிகவும் சிரமப்பட்டனர். மெது மெதுவாக இந்த நோய் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்தி தற்போது இந்த நோய்த்தொற்று கட்டுக்குள் வந்திருக்கிறது.

அதேநேரம் தற்சமயம் ஏற்பட்டிருக்கக் கூடிய புதியவகை நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் மீண்டும் நடவடிக்கையை துரிதப்படுத்தி இருக்கின்றன.

இந்த நிலையில், நாட்டில் நோய் தொற்று பாதிப்பு குறித்த விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7 974 நபர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இது நேற்றைய பாதிப்பான 6984 மற்றும் நேற்று முன்தினம் பாதிப்புகளான 5784 விட அதிகம் இதன் காரணமாக, நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒட்டு மொத்த எண்ணிக்கை 3 கோடியே 47 லட்சத்து 53 ஆயிரத்து 721 ஆக அதிகரித்திருக்கிறது.

சென்ற 24 மணி நேரத்தில் நோய் பாதிப்பிலிருந்து 7 ஆயிரத்து 948 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். இதன் காரணமாக, இந்தியாவில் நோய் தொற்றிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 41 லட்சத்து 54 ஆயிரத்து 879 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 87 ஆயிரத்து 245 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இருந்தாலும் இந்த நோய் தொற்று தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 343 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதன் காரணமாக, இந்தியாவில் நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 76 ஆயிரத்து 478 ஆக அதிகரித்திருக்கிறது.