இந்தியாவில் மீண்டும் அசுர வேகத்தில் பரவும் நோய் தொற்று!

0
63

நாட்டில் நோய்த்தொற்று பரவல் மறுபடியும் அதிகரித்து வருகிறது, அதிலும் குறிப்பாக கடந்த சில தினங்களாக நாட்டில் நோய் தொற்று பின்னர் வேகத்தை அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியாவில் நோய் தொற்று பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 723 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இது நேற்று முன்தினம் பதிவான 1 லட்சத்து 43 ஆயிரத்து 986 மற்றும் நேற்றைய பாதிப்பான 1 லட்சத்து 59 ஆயிரத்து 632 விட மிகவும் அதிகம் என்று சொல்லப்படுகிறது.. இதன் காரணமாக, இந்தியாவில் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3 கோடியே 57 லட்சத்து 7 ஆயிரத்து 727 ஆக அதிகரித்து இருக்கிறது.

சென்ற 24 மணி நேரத்தில் நோய்தொற்று பாதிப்பிலிருந்து 46 ஆயிரத்து 569 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். இதனால் நாட்டில் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் ஒட்டு மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 172 ஆக அதிகரித்திருக்கிறது.. நாடு முழுவதும் நோய் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 7 லட்சத்து 23 ஆயிரத்து 619 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இருந்தாலும் நோய் தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 146 பேர் பலியாகி இருக்கிறார்கள், இதன் காரணமாக, நாட்டில் நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 83 ஆயிரத்து 946 ஆக அதிகரித்திருக்கிறது. அத்துடன் நாடுமுழுவதும் இதுவரையில் 151.94 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது