இந்திய சீன எல்லைக்கான போர் பதற்றம் தீவிரம்? முதன்முறையாக களமிறங்கிய அமெரிக்கா!!

0
67

கடந்த மே மாதம் முதலே இந்திய-சீன இடையேயான லடாக் எல்லை பகுதியில் எல்லைப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.இதனைத் தொடர்ந்து நேற்று முதல்நாள் இரவு லடாக் எல்லையில் கள்வன் பகுதியில் நடந்த சண்டையில் 20 இந்தியர்கள் வீரமரணம் அடைந்தனர்.

அதேபோல் சீனாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் 43 பேர் இந்த சண்டையில் கொல்லப்பட்டனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இரு நாட்டினருக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில்,இவ்வளவு நாட்களாக மௌனம் காத்த அமெரிக்கா நேற்று முன்தினம் இரவு நடந்த சண்டை குறித்து முதன் முதலில் அமெரிக்கா மௌனம் கலைத்து உள்ளது.

இரு நாட்டிற்கும் இடையேயான மோதலை சமாதானப்படுத்த அமெரிக்கா ஆர்வம் காட்டி வருகிறது .அதிலும் முக்கியமாக டிரம்ப் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடக்கும் எல்லை பிரச்சனையை தீர்த்து வைப்பதாக அதிபர் கூறியுள்ளார்.

இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டால் இரு நாட்டிற்கும் இடையே சமாதானம் செய்ய பேசத் தயாராக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இருந்தபோதிலும் இந்த சமாதான பேச்சுவார்த்தைக்கு இந்திய மற்றும் சீன இரு நாடுகளும் மறுப்பு தெரிவித்துவிட்டது.

கடந்த ஜூன் இரண்டாம் தேதி தான் அதிபர் டிரம்பும், மோடியும் தொலைபேசியில் பேசினார்கள் இவர்கள் இந்திய சீனா மோதல் குறித்து பேசினார்கள். அதிலிருந்து லடாக் எல்லை பிரச்சனையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று அமெரிக்காவின் ஸ்டேட் டிபார்ட்மென்ட் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து செய்திகள் கேட்டறிந்தோம் இதற்காக மிகவும் வருந்துகிறோம் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.நாட்டினருக்கும் இடையேயான இந்த எல்லை சண்டை எப்படியாவது பேச்சுவார்த்தையின் மூலம் சமரசம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

author avatar
Pavithra