சீனாவிற்கு அடுத்த ஆப்பு.! முக்கிய பகுதியில் ராணுவ தளம் அமைக்க இந்தியா அதிரடி முடிவு

0
85

இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு நடத்துவதும், அடிக்கடி கைகலப்பு சண்டைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அந்தமான் நிக்கோபர் தீவு பகுதியில் இராணுவ தளத்தை விரிவுபடுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த செய்தி சீனாவிற்கு சற்று கலக்கத்தை தரலாம் என்று கூறப்படுகிறது.

அந்தமான் நிக்கோபார் தீவு பகுதியில் கூடுதல் இராணுவத்தை தயார் நிலையில் வைத்திருக்கவும், ராணுவ உட்கட்டமைப்புகளை துரிதப்படுத்தவும் சரியான தருணம் வந்துவிட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் லடாக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் சிக்கலை ஏற்படுத்தும் சீன படைகளுக்கு பதிலடி தரும் வகையில் அந்தமான்-நிக்கோபர் தீவு பகுதியில் இந்திய ராணுவ தளத்தை நிர்ணயிப்பது காலத்தேவையாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2001 ஆம் ஆண்டு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் முதன்முதலாக இராணுவ தளம் அமைக்க திட்டமிட்டதோடு, கடல் மற்றும் வான்வழி ஊடுருவ முயற்சிக்கும் எதிரி படைகளை துரத்தி அடிக்க இந்த ராணுவ தளம் மிகவும் கைகொடுக்கும் என்று பேசப்பட்டது. அப்போதைய சூழலில் நிதிநிலை மற்றும் சரியான சூழல் அமையாத காரணத்தால் கைவிடப்பட்டது. தற்போது அங்கு இராணுவ தளம் அமைக்க இந்தியா உறுதியுடன் இருப்பது தெளிவாகியுள்ளது.

author avatar
Jayachandiran