எல்லை சிக்கலை தீர்க்க இந்தியா முன்னெடுத்த சாதுர்யமான வழிகள்; முழு படைகளும் வாபஸ்

0
80

இந்தியா-சீனா நாடுகளுக்கிடையே நடந்து வந்த கல்வாள் பள்ளத்தாக்கு எல்லை பிரச்சினையை இந்தியா மிக சாதுர்யமாக கையாண்டது. இதன் பயனாக முதலில் சீனா தனது எல்லையில் குவித்திருந்த படைகளை முழுதாக வாபஸ் பெற்று விலக்கியது. இதையடுத்து இந்தியாவும் தனது மொத்த படைகளையும் வாபஸ் பெற்றது.

ஆரம்ப கட்டத்தில் இருந்தே சீனா சிக்கலை உருவாக்குவதில் தீவிரமாக இருந்தது. இதுவே பிரச்சினைக்கு முக்கிய காரணம். எல்லையில் ஒற்றுமை சமரசம் தேவை என்பது அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு தெரிந்தும் இந்திய ராணுவத்திடம் வேண்டுமென்றே சண்டையிட்டனர். இதில் இந்திய ராணுவம் பொறுமையுடன் கையாண்டது. சண்டையின் போது 20 பேர் இறந்த பின்னரும் எல்லையில் சிக்கலை உருவாக்க நினைக்கவில்லை. மாறாக ஒற்றுமையை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்தியாவின் காந்தி வழியிலான அகிம்சை வழிமுறையே எல்லை சிக்கலுக்கு தீர்வை வகுத்துள்ளது. பதிலுக்கு பதில் நடந்திருந்தால் நிரந்தர எதிரியாக இருநாடுகளும் மாறியிருக்கும். முதற்கட்டமாக சரியான நேரத்தில் இராணுவ அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அமெரிக்கா உதவுவதாக கூறியது. கடைசியாக இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு குறிப்பிடத்தக்கது.

எல்லை விவகாரத்தில் இந்தியா அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் சிறப்பான தீர்வு கண்டது. ஆனால் சீனா பொருளாதார ரீதியாகவும், ஒப்பந்த ரீதியாகவும் தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்டது.

author avatar
Jayachandiran