Connect with us

Breaking News

இந்தியா-ஆஸ்திரேலியா கடைசி ஒரு நாள் போட்டி! ரசிகர்களுக்கு இலவச பஸ் சேவை மெட்ரோ வெளியிட்ட தகவல்!

Published

on

india-australia-last-one-day-match-free-bus-service-for-fans-released-by-metro

இந்தியா-ஆஸ்திரேலியா கடைசி ஒரு நாள் போட்டி! ரசிகர்களுக்கு இலவச பஸ் சேவை மெட்ரோ வெளியிட்ட தகவல்!

இந்தியாவில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. மேலும் இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியாவும், விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றது. மேலும் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயம் செய்யும் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1:30 மணிக்கு நடைபெற உள்ளது.

Advertisement

இந்தப் போட்டிகளை காண ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் ஒரு நாள் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு அரசினர்  தோட்டம் முதல் சேப்பாக்கம் மைதானம் வரை காலை 11:00 மணி முதல் போட்டி முடியும் வரை இலவச மினி பஸ் சேவை வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து  கூட்ட நெரிசல் மிகுந்த நேரத்தில் வழங்கப்படும் மெட்ரோ ரயில் சேவை வழக்கமான நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் இந்த சேவை இன்று மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட உள்ளது எனவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement