Connect with us

Breaking News

இந்தியா ஆஸ்திரேலியா முதலாவது ஒரு நாள் போட்டி! நேரில் கண்டு ரசிக்கும் சூப்பர் ஸ்டார்! 

Published

on

இந்தியா ஆஸ்திரேலியா முதலாவது ஒரு நாள் போட்டி! நேரில் கண்டு ரசிக்கும் சூப்பர் ஸ்டார்! 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் கண்டு ரசித்தார்.

Advertisement

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் போட்டியில் 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இந்நிலையில் ஒரு நாள் போட்டிகள் இன்று முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது.

முதலாவது ஒரு நாள் போட்டி பகல் இரவு மோதலாக மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது.

Advertisement

இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் கண்டு ரசித்து வருகின்றார்.  அவர் மும்பையின் கிரிக்கெட் சங்க தலைவருடன் இணைந்து  போட்டியை நேரில் கண்டு ரசிக்கிறார்.

ரஜினிகாந்த் கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டு ரசிப்பது தொடர்பான புகைப்படங்கள் இணைய தளத்தில் பரவி அதிகம் வைரலாகி வருகின்றது.

Advertisement

 

 

Advertisement