காஷ்மீர் விவகாரம்; டிரம்புக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி!

0
72

சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்டார். இதே மாநாட்டில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை அவர் சந்தித்துப் பேசிய போது ’காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் சம்மதித்தால் மத்தியஸ்தம் செய்ய தயார்’ என்றும் தனது விருப்பத்தை வெளியிட்டார்.

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை அனுமதிக்க முடியாது என இந்தியா ஏற்கனவே பலமுறை கூறி இருந்தும் டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. இந்த நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிட எந்த காரணத்தை முன்னிட்டும் அனுமதிக்க முடியாது என அமெரிக்க அதிபருக்கு பிரதமர் மோடி திட்டவட்டமாக பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ’காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையீடு இருக்கக்கூடாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்றும், இரு நாடுகள் இடையே இருக்கும் இந்த பிரச்சனையை இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க முடியும் என்றும், ஆனால் அதே நேரத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தைக் கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு இந்தியா முன்வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இந்திய அரசு கொடுத்துள்ள பதிலடியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

author avatar
CineDesk