சீன பொருளாதாரத்தை ஆட்டம் காண செய்யும் இந்தியாவின் அடுத்த மூவ்!

0
72

சீன பொருளாதாரத்தை ஆட்டம் காண செய்யும் இந்தியாவின் அடுத்த மூவ்!

கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில் தற்போது உள் நாட்டிற்காக எடுத்து ஒரு முடிவு சீன பொருளாதாரத்தை ஆட்டி பாக்கும் வகையில் அமைந்துள்ளது. அதாவது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் கலர் டிவி இறக்குமதியில் இந்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுள்ளது.

இந்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த கட்டுப்பாடுகள் பெரும்பாலான உலக நாடுகள் அனைத்தையும் பாதிக்கும் என்றாலும் அதிகமாக பாதிக்கப்படுவது என்னவோ சீனா தான். ஏற்கனவே அமெரிக்கா மற்றும் சீனா இடையே பொருளாதார உறவு சரியில்லாத இந்நேரத்தில் இந்தியாவின் இந்த முடிவு சீனாவிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வெளிநாட்டு இறக்குமதி இயக்குனரகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது, கலர் டிவி இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கலர் டிவி போன்ற அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை குறைக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு வரை இந்தியாவில் பெரியளவில் இது போன்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டுப்பாடுகளின் படி, கட்டுப்பாடு செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய முயன்றால், அதற்காக இறக்குமதியாளர் வர்த்தக அமைச்சகத்தின் Directorate General of Foreign Trade-யிடம் இருந்து முறையான அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் இந்தியாவுக்கு அதிகளவில் கலர் டிவிக்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதன்மையானது சீனா தான். இதனை தொடர்ந்து வியட்நாம், மலேசியா, ஹாங்காங், தென் கொரியா, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளும் இந்த பட்டியலில் உள்ளது. இந்திய அரசின் இந்த புதிய கட்டுப்பாட்டால் இந்த நாடுகளிலிருந்து செய்யப்படும் இறக்குமதி பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் 781 மில்லியன் டாலர் மதிப்புள்ள கலர் டிவிகளை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. மேலும் இதில் வியட்னாமில் இருந்து 400 மில்லியன் டாலர் மதிப்பிலும், சீனாவில் இருந்து 300 மில்லியன் டாலர் மதிப்பிலும் கலர் டிவி இறக்குமதி செய்யப்பட்டிருந்ததாக இது குறித்து தரவுகள் கூறுகின்றன.

மேலும் குறிப்பாக கல்வான் தாக்குதலுக்கு பிறகு சீனாவிற்கு எதிராக பல நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருவது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியா எடுத்துள்ள இந்த முடிவால் சீன பொருளாதாரம் ஆட்டம் காண ஆரம்பிக்கும் என்று கருதப்படுகிறது.