இந்தியா மற்றும் பிரிட்டன் விரைவில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்படும்! பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் உறுதி!

0
83

பிரிட்டன் பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் இந்தியாவைச் சார்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் இந்தியா மற்றும் இங்கிலாந்திடையே இரு வழி ஏற்படுத்தப்படும் என்று உறுதி வழங்கியுள்ளார்.

ஐரோப்பிய நாடான இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியுள்ளார், அவர் அங்கம் வகிக்கும் பழமைவாத கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராக முடியும்.

இதனை தொடர்ந்து கட்சி தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட தேர்தலில் முன்னாள் நிதியமைச்சர் ரிஷீசுனக், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

கட்சியின் பிரதிநிதிகள் வாக்களித்து செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெறும் இந்த தேர்தலில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கவிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து கட்சி பிரதிநிதிகளிடம் ஆதரவு கேட்டு பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கட்சியைச் சார்ந்த இந்திய வம்சாவளியைச் சார்ந்த பிரதிநிதிகள் கூட்டம் லண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கட்சி பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து ரிஷி சுனக் பேசினார்.

இரு நாட்டுக்குமிடையே நாம் பக்கபலமாக இருந்து வருகிறோம், இந்தியாவில் நம் பொருட்கள் விற்பதற்கு மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதை நாம் அறிவோம்.

இருநாட்டு உறவில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறேன், இந்தியாவிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும், இதன் காரணமாக, நம் மாணவர்கள், நம்முடைய நிறுவனங்கள், இந்தியாவுக்கு செல்வதை சுலபமாக்குவேன். ஒரு வழி பாதையாக இருக்கின்ற உறவை இருவழிப் பாதையாக மாற்றுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.