இந்தியா – அமெரிக்கா இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

0
78

இந்தியா – அமெரிக்கா இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

இரண்டு நாள் அரசு பயணமாக வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு நேற்று சிறப்பான வரவேற்பும், மிகப்பெரிய அளவில் சிறப்பான மரியாதையும் வழங்கப்பட்டது.

பின்னர், மோடி மற்றும் டிரம்ப் அறிமுகத்திற்கு பிறகு குஜராத் சபர்மதி ஆசிரமத்தை டிரம்ப் பார்வையிட்டார். இதனையடுத்து சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் பல லட்சம் மக்களிடையே டிரம்ப் சிறப்புரையாற்றினார். அங்கு அவருக்கு “நமஸ்தே டிரம்ப்” என்று இந்தியாவின் சார்பாக வரவேற்று புகழ்பெயர் வைக்கப்பட்டது.

அக்கூட்டத்தில் பேசிய டிரம்ப், இந்தியா வளர்ந்து வரும் நாடுகளில் சிறப்பான நாடாக விளங்குகிறது. இந்திய பிரதமர் மோடி என்னுடைய கிரேட் நண்பர் என்றும், இந்திய மக்கள் அனைவரையும் நண்பர்களாக நேசிக்கிறேன் என்று தெரிவித்தார். சச்சின் டெண்டுல்கர், விராட்கோலி போன்ற புகழ்மிக்க வீரர்களை பெற்ற நாடு என்று புகழ்ந்து பேசினார். இந்தியா பிரம்மிப்பான வளர்ச்சியை கொண்டுள்ளதாகவும், பிரதமர் மோடியின் கடின உழைப்பை வைத்து இந்தியர்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்றும் கூறினார்.

இந்தியாவின் மிகச்சிறப்பான வரவேற்பை என்னால் மறக்க முடியாது என்றும், 70 ஆண்டுகளில் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்தியா விளங்குவதாகவும் குறிப்பிட்டார். மேலும் மோடியின் சாதனைகளை பட்டியலிட்டு பாராட்டி பேசினார். இந்தியாவிற்கு அமெரிக்க நல்ல நட்பு நாடாக இருக்கும் என்று தெரிவித்தார். இந்நிலையில் இரு நாட்டு பிரதமர்களின் சந்திப்பின் மூலம் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து இன்று கையெழுத்தாக உள்ளது.

இந்தியாவுக்கு தேவையான ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கி வருவதாகவும் கூறினார். மேலும் இரு நாடுகளுக்கிடையே ரூபாய் 21,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

author avatar
Jayachandiran