முதல் நாள் சொதப்பல்: இரண்டம் நாள் பயங்கர சொதப்பல்! 165 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் !

0
81

முதல் நாள் சொதப்பல்: இரண்டம் நாள் பயங்கர சொதப்பல்! 165 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் !

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று வெல்லிங்க்டன் மைதானத்தில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. 16 ரன்கள் சேர்த்திருந்த போது முதல் விக்கெட்டாக பிருத்வி ஷா 16 ரன்களில் வெளியேறினார்.அதன் பின் வந்த புஜாராவும் வெகுநேரம் நீடிக்கவில்லை. தன் பங்குக்கு 11 ரன்களை சேர்த்து வெளியேறினார்.

அதற்கடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்க பட்ட விராட் கோலி களமிறங்கினார். அணியை சரிவில் இருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட 2 ரன்களில் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 40 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பின் வந்த ரஹானே தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலோடு சேர்ந்து நிதானமாக விளையாடினார். ஒரு கட்டத்தில் மய்ங்க் அகர்வால் 34 ரன்களுக்கு அவுட் ஆக இந்தியாவின் நிலை மேலும் மோசமானது.

அவரை அடுத்து வந்த ஹனுமா விஹாரியும் உடனே நடையைக் கட்டினார். அவருக்கு பின் நீண்ட நாட்களுக்குப் பிறகு அணியில் இடம்பிடித்த பண்ட் வந்து பொறுமையான் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் ரன்களை பற்று கவலைப் படாமல் தடுப்பாட்டம் ஆடினர். 55 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழைக் குறுக்கிட்டது. இதனால் முதல் நாள் ஆட்டம்  முடித்துக் கொள்ளப்பட்டது. ஆட்ட முடிவில் இந்திய அணி 122 ரன்களுக்கு 5விக்கெட்க்ளை இழந்திருந்தது. ரஹானே 38 ரன்களோடும் பண்ட் 10 ரன்களோடும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து இன்று ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய மளமளவென விக்கெட்களை இழந்தது, இதையடுத்து போட்டித் தொடங்கிய நிலையில் மேலும் 7 ரன்கள் சேர்த்த பண்ட் 17 ரன்களில் அவுட் ஆனார். அதன் பின்னர் அஸ்வின்(0), ரஹானே (46) விக்கெட்கள் விழ முகமது ஷமி அதிரடியாக 21 ரன்களைக் குவித்தார். இதனால் இந்திய அணி 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அபாரமாக வீசிய டிம் சவுத்தி மற்றும் ஜேமீஸன் ஆகியோர் தலா 4 விக்கெட்களைக் கைப்பற்றினர். இதன் பின் தன் முதல் இன்னிங்ஸை ஆடிவரும் நியுசிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் சேர்த்துள்ளது.

author avatar
Parthipan K