உயிர் நண்பனுக்காக கூட கொள்கை மாறாத இந்தியா ஐ.நா.சபையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

0
98

உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே கடந்த 24ஆம் தேதி முதல் கடுமையான போர் நடைபெற்று வருகிறது.இந்தப் போரில் இருநாடுகளும் ராணுவ ரீதியாக பல இழப்புகளை சந்தித்திருக்கின்றன.

அதேநேரம் உக்ரைன் தன்னுடைய நாட்டு பிரஜைகளையும், தன்னுடைய முக்கிய பகுதிகளையும் இழந்திருக்கிறது.ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தனர்.

இதன் தாக்கம் காரணமாக கச்சா எண்ணெயின் விலை நிலவரம் 100 அமெரிக்க டாலர்கள் வரை அதிகரித்தது.மேலும் ஐநா சபையில் ரஷ்யாவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிக்காமல் நடுநிலை வகித்தது இந்தியா.

இதனைக்கண்ட அமெரிக்காவோ ரஷ்யாவிற்கு இந்தியா மறைமுக ஆதரவை தெரிவித்து வருகிறது இதனால் அந்த நாட்டின் மீதும் பொருளாதார தடை விதிக்க கூடுமென்று எச்சரிக்கை செய்தது. ஆனாலும் இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.

இந்தநிலையில் உக்ரைனில் மனிதாபிமான நிலைமை தொடர்பாக விவாதம் செய்ய வேண்டும் என தெரிவித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா வரைவு தீர்மானம் கொண்டு வந்தது. சிரியா, வடகொரியா மற்றும் பெலாரஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் தீர்மானத்தை ஆதரித்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த தீர்மானத்தில் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடர்பான ரஷ்யாவின் எந்த ஒரு குறிப்பும் இடம்பெறவில்லை மனிதாபிமான அடிப்படையில் போர் நடைபெறும் பகுதிகளிலிருக்கின்ற பெண்கள் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் முழுமையாக பாதுகாக்கப்படவேண்டும். உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்க வேண்டும் போன்றவை அந்த தீர்மானத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

ரஷ்யாவும், சீனாவும், தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர் இந்த கூட்டத்தில் இந்தியா தரப்பில் உரை நிகழ்த்தப்படவில்லை அதோடு இந்தியா உட்பட 13 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தனர். தீர்மானம் நிறைவேற 9 ஆதரவு வாக்குகள் தேவைப்பட்டதால் ரஷ்யா கொண்டு வந்த வரைவுத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இதற்கு முன்பாக ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் போதும் இந்தியா வாக்களிக்கவில்லை, தற்சமயம் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்கவில்லை.

ஆகவே அனைத்து சமயங்களிலும் இந்தியா தன்னுடைய நடுநிலையை நிலை நிறுத்தியிருக்கிறது.இந்தியா எப்போதும் அணிசேரா கொள்கையை மிகவும் கண்டிப்புடன் பின்பற்றி வருகிறது என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம் என சொல்லப்படுகிறது.