மூவர்ணக்கொடி பறக்கும் முதல் சுதந்திர தின விழா!

0

முழு இந்தியாவும் மூவர்ணக்கொடி பறக்கும் முதல் சுதந்திர தின விழா!

டெல்லி: டெல்லி செங்கோட்டையில் 73 வது சுதந்திர தின விழா முப்படையினர் மரியாதையுடன் நடைபெற்று வருகிறது.

பாரத நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்னும் சற்று நேரத்தில் மூவர்ணக்கொடி யான தேசிய கொடியை செங்கோட்டையில் ஏற்றி வைத்து மரியாதை செலுத்த இருக்கிறார்.

இன்றைய தினம் அனைத்து மாநிலங்களிலும் சுதந்திர தினம் ஆளுநர்கள் முந்நிலையில் முதலமைச்சர்கள் குடியேற்ற பல்வேறு அணிவகுப்புகளுக்குப்பின் சலுகைகள், பட்டங்கள் வழங்கி சிறப்பிக்க உள்ளனர்.

இதே போன்று பள்ளி ,கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கியும், தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தியும் வருகின்றனர்.

நாட்டில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஜம்மு & காஷ்மீர் சரத்து 370 பின் வாங்கப்பட்ட நிலையில்
இந்தியாவின் மூவர்ணக்கொடி பறக்கும் முதல் சுதந்திர தின விழா மிகச்சிறப்பான விசயமாகும்.

இந்நந்நாளில்
இந்திய நாட்டின் மக்களுக்கு
சுதந்திர தின வாழ்த்துக்கள்

தெரிவிப்பதில் #நியூஸ்4தமிழ் பெருமை கொள்கிறோம்.

Copy

Leave A Reply

Your email address will not be published.

WhatsApp chat