12 ஆண்டுகளாக பகுதி நேர வேலை! பணி நிரந்தரம் செய்திட வேண்டி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

0
106
#image_title

12 ஆண்டுகளாக பகுதி நேர வேலை! பணி நிரந்தரம் செய்திட வேண்டி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

12 ஆண்டுகளாக பகுதி நேரமாக பணிபுரியும் ஆசிரியர்களை அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி பணி நிரந்தரம் செய்திட வேண்டி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்.

2012 ஆம் ஆண்டு ஓவியம், உடற்கல்வி, கணினி, தையல், இசை, வாழ்வியல் திறன், கட்டிடக்கலை, தோட்டக்கலை என எட்டு பிரிவுகளின் கீழ் தமிழகம் முழுவதும் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டோம்.

வாரத்தில் மூன்று அரை நாட்கள் வீதம் மாதத்திற்கு பன்னிரண்டு அரை நாட்கள் தான் வேலை. அப்போது மாதம் 5,000 ஊதியம் வழங்கப்பட்டது.அதன் பிறகு 2014 ல் 2,000 ஊதியம் உயர்த்தப்பட்டு 7,000 ஆகவும் 2017 ல் 700 ரூபாயும் 2021 ல் 2,300 ம் உயர்த்தி தற்போது 10,000 ஊதியம் வாங்கி வருகிறோம்.

இந்நிலையில் 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் வரிசை எண் 181 ல் திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என சொல்லியிருந்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவோம் என நம்பிக்கையோடு காத்திருந்தோம்.

ஆனால் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் நிதிநிலை அறிக்கையிலும் எங்களுக்கான எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

எனவே எங்களது கோரிக்கையை நிறைவேற்றிட 05.04.2023 புதன்கிழமை முதல் சென்னை, நுங்கம்பாக்கம், பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

இப்போராட்டத்தில் தாங்கள் கலந்து கொண்டு எங்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

author avatar
Savitha