கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு !மத்திய சுகாதாரத் துறையின் அதிரடி உத்தரவு ! 

0
111
Increase in the spread of corona infection! Federal Health Department's new strategy!
Increase in the spread of corona infection! Federal Health Department's new strategy!

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு! மத்திய சுகாதாரத் துறையின் புதிய வியூகம்!

கொரோனா தொற்று தற்போது மிக விரைவாக பரவி வருகின்றது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த  கோவாக்சின், கோவிஷீல்டு எனும் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதனால் கொரோனா தொற்று  குறைந்தது. மேலும் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் ஏற்பட்ட மக்கள் அலட்சியத்தின் காரணமாக மீண்டும் இத்தொற்று வேகமாக பரவ தொடங்கியுள்ளது. எனவே தொற்றை கட்டுப்படுத்த நாசி வழியாக எடுத்துக்கொள்ளும் தடுப்பூசி மிகவிரைவாக அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

மேலும் கொரோனா தொற்று பாதிப்பானது தற்போது 4 மாதங்களில் 13, 000த்தை எட்டியுள்ளது. நேற்றைய நிலவரத்தின் படி மேலும் இத்தொற்றால்13,216 பேர்  புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் மொத்த பாதிப்பானது 4.32 கோடியாக அதகரித்துள்ளது. தற்போது 72,474 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல மொத்த உயிரிழப்பு 5,24,855 ஆக அதிகரித்துள்ளது. எனவே தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக விரைவாக தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இத்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நாசி வழியாக எடுத்துக்கொள்ளப்படும் தடுப்பூசிகள் மிக விரைவாக பயன்பாட்டிற்கு வரும் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றது.கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக், நாசி வழி எடுத்துக்கொள்ளும் தடுப்பூசிக்கான ஆய்வக பரிசோதனை  முடிந்தது என அறிவித்துள்ளது. இப்பரிசோதனை மூன்று கட்டமாக நடத்தப்படுகின்றது. மேலும் இதற்கான ஆய்வறிக்கைகள் அடுத்த மாதம் மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையத்திடம் வழங்க உள்ளது என நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா  தெரிவித்துள்ளார். ஆணையம் அனுமதியளித்தால் உலகின் முதல் நாசி வழி தடுப்பூசியை இந்தியா அறிமுகப்படுத்தும

author avatar
CineDesk