மீண்டும் கர்நாடக அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு !!

0
61

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணையிலிருந்து காவிரி பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, அணையின் பாதுகாப்புக்காக அணையில் இருந்து நீரை அதிகமாக திறந்து விடுவது வழக்கமான ஒன்றாகும் . முக்கியமாக கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு தற்பொழுது உயர்ந்துள்ளது.

தொடர் கனமழையால் அணையின் நீர்பிடிப்பில் கே.ஆர்.எஸ் அணையில் 10,668 அடி நீரும் ,கபினி அணையிலிருந்து 35,000 கனஅடி நீரும் திறக்கப்படுவதால், காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 45,668 கனஅடியாக உயர்ந்துள்ளது.

மேலும், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

author avatar
Parthipan K