சீனாவில் மீண்டும் வேகமெடுத்த நோய்த்தொற்று பரவல்! பொழுதுபோக்கு பூங்கா மூடல்!

0
72

அமெரிக்காவை சார்ந்த டிஸ்னி நிறுவனத்தின் பொழுதுபோக்கு பூங்காக்கள் உலகம் முழுவதும் பிரபலமானது என்று சொல்லப்படுகிறது. அந்த விதத்தில் சீனாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய நகரமான ஷாங்காய் நகரில் பிரமாண்டமான டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா இருந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், சீனாவில் 2 வருடங்களுக்கு பிறகு நோய் தொற்று பரவும் வேகம் எடுக்கத் தொடங்கியிருக்கிறது. இதனையடுத்து அங்கே பல்வேறு நகரங்களில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது ஆகவே சீனாவிலுள்ள பன்னாட்டு நிறுவனங்களின் சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையே ஷாங்காய் நகரிலும் தற்சமயம் நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது ஆனாலும் அங்கு இதுவரையில் ஊரடங்கு அமல் படுத்தப்படவில்லை அதிக நேரம் முடிந்த வரை பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் வைத்து ஷாங்காய் நகரில் இருக்கின்ற பொழுது போக்கு பூங்காவை காலவரையின்றி மூடுவதாக டிஸ்னி நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதோடு அடுத்த அறிவிப்பு வரும் முறையில் பொழுதுபோக்கு பூங்கா மூடப்பட்டிருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.