ஏழுமலையான் கோவில் வருடாந்திர வசந்த உற்சவம் துவக்கம்!! 

0
133
#image_title

ஏழுமலையான் கோவில் வருடாந்திர வசந்த உற்சவம் துவக்கம்!!

நாளை காலை தங்க ரதத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாத வீதிகளில் உலா.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோடைகால துவக்கத்தில் வசந்த உற்சவம் என்ற பெயரில் மூன்று நாள் உற்சவம் கோலாகலமாக நடைபெறும். இந்த வகையில் இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம் திருப்பதி மலையில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. வசந்த உற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோவில் பின்பகுதியில் இருக்கும் வசந்த மண்டபத்தை தேவஸ்தான நிர்வாகம் அடர்ந்த வனப்பகுதி போல் கண்கவர் வகையில் அலங்கரித்துள்ளது.

இந்த நிலையில் வசந்த உற்சவத்தில் முதல் நாள் ஆன இன்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதியில் வழியாக வசந்த மண்டபத்தை அடைந்தார். அங்கு உற்சவர்களுக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் திருமஞ்சனம் அபிஷேகம், நடைபெற்றது தீப தூப நைவேத்திய சமர்ப்பணம் ஆகியவை நடத்தப்பட்டன.

தொடர்ந்து உற்சவர்கள் மாலை மாட வீதியில் வழியாக கோவிலை அடைந்தனர்.
வசந்த காலத்தை வரவேற்கும் நடைபெறும் வசந்த உற்சவத்தின் இரண்டாவது நாளான நாளை மீண்டும் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி வசந்த மண்டபத்தில் எழுந்துள்ள உள்ளார். அங்கு இன்று நடைபெற்றது போல் அபிஷேகம், தூப தீப,நைவேத்திய சமர்ப்பணம் ஆகியவை நடைபெறும்.

மூன்றாவது நாளான நாளை மறு நாள் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சீதா தேவி சமேத ராமர், லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், ருக்மணி தேவி சமேத கிருஷ்ணர் ஆகிய மூன்று யுக மூர்த்திகள் வசந்த மண்டபத்தில் எழுந்துள்ள உள்ளனர். அன்றைய தினம் அங்கு உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீப தூப நைவேத்திய சமர்ப்பணம் ஆகிய நடைபெறும்.
தொடர்ந்து மூன்று யுக கடவுளர்களும் மாலையில் மாட வீதிகள் வழியாக கோவிலை அடைய உள்ளனர். வசந்த உற்சவத்தை முன்னிட்டு இரண்டாம் நாளான நாளை காலை தங்கரதத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சாமி நான்கு மாத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

author avatar
Savitha