விஜய் படத்தில், விஜய்க்கு பிடிக்காத ‘இன்ட்ரோ பாடல்’!

0
95

விஜய் படத்தில், விஜய்க்கு பிடிக்காத ‘இன்ட்ரோ பாடல்’!

மாஸ்டர் படத்தை தொடர்ந்து, விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ளார்.

சன் பிச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, டப்பிங் பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், வருகிற ஏப்ரல் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது ‘பீஸ்ட்’ திரைப்படம்.

இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடலான அரபிக்குத்து பாடல் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்த பாடலுக்கு திரைபிரபலங்கள் பலரும் நடனமாடி அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் நாள்தோறும் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் விஜய்க்கு ஒரு பாடல் பிடிக்காததால் அந்த பாடல் மாற்றப்பட்டது குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான அழகிய தமிழ் மகன். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் விஜய் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்த இன்ட்ரோ பாடலை படத்தின் இயக்குனர் பரதன் விஜய்க்கு போட்டு காட்டியுள்ளார்.

அந்த பாடலை கேட்ட விஜய் தனக்கு இந்த பாடல் பிடிக்கவில்லை என்றும், எனவே படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலை மாற்றும்படி படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார். படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர், இந்த இன்ட்ரோ பாடல் விஜய்க்கு மட்டுமல்ல தங்களுக்கும் பிடிக்கவில்லை எனக் கூறி இந்த பாடலை மாற்றும்படி கேட்டுள்ளனர்.

அன்றைய தினமே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கவிஞர் வாலியை தொலைபேசியில் தொடர்புகொண்டு எழுதிய இன்ட்ரோ பாடல்தான் ‘எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே’. இந்த பாடலை கேட்டதும் விஜய் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான சுரா தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K