அடுத்த 12 மணி நேரத்தில் வங்ககடலில் ஏற்படவிருக்கும் புயல் சின்னம்! இந்திய வானிலை ஆய்வு மையம் கடுமையான எச்சரிக்கை!

0
70

வங்ககடலில் ஏற்பட்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக வலுவடைந்து நாளை மாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து இருக்கிறது. தற்சமயம் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வங்கக் கடலில் நிலை கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் ஆரம்பிக்க இருக்கிறது பருவமழையை எதிர்கொள்வதற்கு மாநில பகுதிகள் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் அறிவுறுத்தி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் சமீபத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்ற நிலையில், நேற்றைய தினம் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் வடகிழக்கு பருவ மழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடந்து இருக்கிறது.

இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இந்த சூழ்நிலையில், வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்தது. வங்க கடலில் நேற்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டது தற்போது அது தொடர்ந்து வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடக்கு மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கோலாப்பூர் 110 கிலோ மீட்டர் தொலைவிலும், கலிங்கப்பட்டினத்தில் 590 கிலோ மீட்டர் தொலைவிலும், நிலை கொண்டு இருக்கிறது. இந்த புயல் சின்னம் ஆனது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலு பெற்று மேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை கோலாப்பூர், விசாகப்பட்டினம், இடையே கலிங்கப்பட்டின நகருக்கு அருகே கரையை கடக்க இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து இருக்கிறது. இதற்கு பாகிஸ்தான் பரிந்துரைக்கப்பட்ட குலாப் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த புயலால் அதிக சேதாரங்கள் ஏற்பட வாய்ப்பில்லை எனவும், கடலோர மாவட்டங்கள் அதுவும் குறிப்பாக ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், மாநிலங்களில் இதன் தாக்கம் காரணமாக, அதிக அளவில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.