வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகாவிற்கு இந்த 200 தொகுதிகளில் வாய்ப்பு குறைவு!

0
62

வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகாவிற்கு இந்த 200 தொகுதிகளில் வாய்ப்பு குறைவு!

உத்தரபிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. மேலும், தன கைவசம் இருந்த பஞ்சாபையும் பறிகொடுத்தது. இந்த ஐந்து மாநில தேர்தல் தோல்வியின் எதிரொலியால் காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

தற்போது காங்கிரஸ் கட்சியின் கைவசம் இரண்டு மாநிலங்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தோல்வியின் காரணமாக, கட்சியை மறுசீரமைப்பு செய்வதற்காக அந்த ஐந்து மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என சோனியா காந்தி அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், பல்வேறு கட்சிகளின் தேர்தல் வெற்றிகளுக்கு பிரச்சார வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில்,

காங்கிரஸ் மறு அவதாரம் எடுக்க வேண்டும். அதன் சித்தாந்தங்கள் அனைத்தும் புதிதாக இருக்க வேண்டும். காங்கிரஸ் தற்போது, தனது செயல்திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தினாலே வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு சவால் விட முடியும்.

மேலும், கிழக்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் உள்ள சுமார் 200 பாராளுமன்ற தொகுதிகளில் பாஜக இன்னும் 50 இடங்களுக்கு மேல் வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. எனவே இதை கருத்தில் கொண்டு காங்கிரஸ் செயல்பட்டால் காங்கிரசுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K