Connect with us

Breaking News

கண்ணிமைக்கும் நொடியில் அப்பளம் போல் நொறுங்கிய லாரி! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Published

on

in-the-blink-of-an-eye-the-truck-was-crushed-like-a-pancake-a-lot-of-excitement-in-the-area

கண்ணிமைக்கும் நொடியில் அப்பளம் போல் நொறுங்கிய லாரி! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் பகுதி கச்சிராப்பாளையம் கல்வராயன்மலை பொட்டியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (24). இவர் கருமந்துறை பகுதியில் தங்கி லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மேலும் நேற்று காலை அயோத்தியபட்டினம் அடுத்த மின்னாம்பள்ளியில் இருந்து டிப்பர் லாரியில் ஜல்லிக்கற்கள் கல்வராயன் மலை கருமந்துறை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டியப்பன் என்பவரும் லாரியில்  சென்று கொண்டிருந்தார்.

Advertisement

மேலும் லாரி வாழப்பாடி அடுத்த சந்திரபிள்ளை வலசு கிராமத்தில் பேளூர்  அயோத்தியபட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவர் பிரகாஷின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் அனைத்து பகுதிகளிலும் தடுமாறிய வண்ணம் சென்றது. அந்த லாரி எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மேல் நேருக்கு நேராக மோதியது.

அப்போது லாரியின் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கியது லாரியின் இடிபாடுகளில் சிக்கி பிரகாஷ், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தார். மேலும் இவருடன் சென்ற ஆண்டியப்பன் படுகாயத்துடன் உயிர் தப்பினார். மேலும் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு ஆண்டியப்பன்  தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement