மு க அழகிரியும் ஜேபி நட்டாவும் சந்திப்பு? ஸ்டாலின் அதிர்ச்சி!

0
64

தமிழக பாஜகவின் தலைவர் முருகன் மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவிக்கும்போது பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா தமிழகம் வரவிருக்கிறார் என்பது தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுக்கும். அவருக்கு மதுரையில் ஒரு சிறப்பான வரவேற்பு கொடுக்க இருக்கின்றோம். அவர் மு.க. அழகிரியை சந்திப்பாரா என்று கேள்வி எழுப்பியதற்கு பதில் தெரிவித்த முருகன் ஜெ .பி . நட்டாவின் வருகை எங்களுடைய அமைப்பு குறித்த கூட்டத்தில் பங்கேற்க மட்டுமே இதில் அரசியல் காரணம் எதுவும் கிடையாது என்று தெரிவித்தார்.

அதோடு ஏழு வருடங்களாக இந்தியாவின் நிலை சரி இல்லை என்று பா. சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். அவர் நிதி அமைச்சராக இருந்த நேரத்தை விட தற்சமயம் பாஜகவின் ஆட்சி செய்யும் சமயத்தில், நிதிநிலை சிறப்பாக இருக்கிறது வேளாண் சட்டங்களை முழுமையாக தெரிந்துகொண்டால் நாடே பற்றி எரியும் என்று ராகுல்காந்தி தெரிவித்திருக்கிறார் ராகுல்காந்தி வேளாண் சட்டங்களை முழுமையாக படிக்கவில்லை என்பதையே அவருடைய இந்த செயல் காட்டுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

அந்த வேளாண்மை சட்டங்களை முழுமையாக தெரிந்து கொண்டவர்கள் அந்த சட்டத்தை ஆதரித்து கொண்டிருக்கிறார்கள். அதனைப் பற்றி தெரிந்து கொள்ளாதவர்கள் அந்த சட்டத்தை ஏற்பதற்கு மறுத்து வருகிறார்கள். சட்டசபைத் தேர்தலில் தேமுதிக 41 தொகுதிகளை கேட்பதெல்லாம் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்த பின்னரே தெரிவிக்க இயலும் என்று தெரிவித்திருக்கிறார் எல். முருகன்