அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய 6 சிறார்களில் மூன்று பேர் கைது!!

0
144
#image_title

அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய 6 சிறார்களில் மூன்று பேர் கைது!!

கடலூர்,நெல்லை,சென்னை ஆகிய பகுதிகளில் வேலூர் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை!

வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட சுமார் 18 வயது முதல் 21 வயது உடைய 42 இளைஞர்கள் மற்றும் இளம் சிறார்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

அவர்களில் 6 இளம் சிறார்கள் மார்ச் 27ம் தேதி அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து சுவர் ஏறி தப்பி சென்றனர். தப்பி ஓடிய இளம் சிறார்களை பிடிப்பதற்காக வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் தலைமையில் 3 அடிப்படை அமைக்கப்பட்டிருந்தது.

தப்பி ஓடிய இளம் சிறார்களை கடலூர், நெல்லை மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் தனிப்படை போலீசார் தேடி வரும் நிலையில், கடந்த 31ம் தேதி ஒரு இளம் சிறாரை சென்னையில் வைத்து வேலூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், சென்னை மணலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்தபோது இரு இளம் சிறார்கள் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்திலிருந்து தப்பி வந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

இதுவரை அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து தப்பி ஓடிய 6 இளம் சிறார்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 3 பேரையும் தேடும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில், சென்னையில் மணலி காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள இருவர் குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் அங்கேயே வழக்கு பதியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

author avatar
Savitha