‘வாட்ஸ்அப்பில்’ இதை செய்தால் சிறைதண்டனை விதிப்பு!

0
95

‘வாட்ஸ்அப்பில்’ இதை செய்தால் சிறைதண்டனை விதிப்பு!

தற்போதைய கால சூழலில் இணையம் காரணமாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, இதுபோன்ற சைபர் குற்றங்களை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்தவகையில், சவுதி சட்ட வல்லுனர்கள் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதில், ஒருவர் ‘வாட்ஸ்அப்பில்’ ஹார்ட் எமோஜியை அனுப்பி மற்றவரை தொந்தரவு செய்தால் அவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என சவுதி சட்ட வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இது குறித்தான தகவலை சவுதி அரேபியாவின் மோசடி தடுப்பு சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அந்நாட்டின் செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்:-

வாட்ஸ்அப்பில் ஹார்ட் எமோஜியை அனுப்புவது பாலியல் தொல்லை குற்றத்திற்கு சமம் என கூறியுள்ள அவர், சில குறிப்பிட்ட படங்கள் மற்றும் எமோஜிகளை சாட் செய்ய பயன்படுத்துவது பாலியல் குற்றமாகவே கருதப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், சம்பத்தப்பட்ட நபர் இதுகுறித்து புகார் அளித்தால், புகார் அளிக்கப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சவுதி நாட்டில் இருக்கும் ஹாரஸ்மென்ட் எதிர்ப்பு அமைப்பின்படி, பாலியல் தொல்லை என்பது ஒரு நபர் தனது செயல் உட்பட எந்த வகையிலும் பாலியல் அர்த்தத்துடன் செய்யப்படும் அனைத்து விதமான சைகை என வரையறை செய்யப்பட்டுள்ளது. எனவே, இதில் பாலியல் அர்த்தங்களுடன் ஹார்ட் எமோஜிகளை அனுப்புவதும் அடங்கும்.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட நபர் சம்பத்தபட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம். விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், இரண்டு வருட சிறை தண்டனை அல்லது 1,00,000 சவுதி ரியால் அபராதமாக விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஒருவர் மீண்டும் மீண்டும் இதே செயல்களில் ஈடுபட்டால் அவருக்கு ஐந்து ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

author avatar
Parthipan K