பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வேலை நிறுத்த  போராட்டம் பிப்ரவரி  18 ஆம் தேதி திங்கள்கிழமை  தொடங்கியது .அதன் தொடர்ச்சியாக 3 வது நாளான  இன்றும் இந்த வேலை நிறுத்தம் தொடர உள்ளது.18 ஆம்  தேதி முதல் 20 ஆம் தேதி வரை  மூன்று நாளாக வேலை நிறுத்தம்  தொடரும் என பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.இதனால் பல பிஎஸ்என்எல் சேவைகள் முடங்கியுள்ளது .இந்த வேலை நிறுத்த  போராட்டத்தில்  90 ஆயிரம்  பேர்  கலந்துகொண்டனர் .தமிழகத்தில் மட்டும் 20 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள் .இதில் சென்னையில் மட்டும் 5 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள் .

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில்  ஊழியர்களின் பல்வேறு  கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது  .4 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ,இந்திய முழுவதும் மிக பெரிய அளவில் கட்டமைப்பு வசதிகளை கொண்ட இந்த நிறுவனத்திற்கு இன்னும் 4 ஜி அலைக்கற்றை முறையாக வழங்கப்படாத காரணத்தால் பல வாடிக்கையாளர்கள் வேறு நெட்ஒர்க்  தேர்வு செய்து அதற்கு செல்கின்றனர் .4 ஜி  சேவையை பிஎஸ்என்எல் வழங்க வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கையில் ஒன்று .பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லை  தனியார்மயமாக்க கூடாது ,ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்னும் பல்வேறு கோரிக்கைகள் இதில் வலிவுறுத்தியுள்ளனர் .

நிர்வாக நலன் மற்றும் மக்கள் நலன் சார்ந்தே எங்கள் போராட்டம் அமைந்துள்ளது எனவும் 4 ஜி  சேவை கொண்டு வரப்பட்டால் மட்டுமே வருவாய் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தனியார் தொலை தொடர்பு  நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் இந்த 4 ஜி சேவை பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டால் அதிக வேகமான நெட்ஒர்க் இணைப்புகளும் , புதிய வாடிக்கையாளர்களின்  எண்ணிகையும்  அதிகரிப்படும் .

கோரிக்கைகள் மீது எழுத்து பூர்வமான உத்திரவாத்தை அளித்தால் மட்டுமே எங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என்று போராட்ட நிர்வாகிகள் கூறியுள்ளனர்


மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.