பாஜக அதிமுக கூட்டணியில் குழப்பமா? அதிமுக எடுத்த அதிரடி முடிவு!

0
79

கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது அந்த சமயத்தில் புதிதாக தொடங்கப்பட்ட காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

இதை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை விசாரணை செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் இந்த தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்கள். அதன்பிறகு தேர்தல் ஆணையம் சார்பாக அவகாசம் கோரப்பட்டது. இதன்படி கடந்த 15ஆம் தேதி தொடங்கி வேட்பாளர் மனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாளைய தினத்தோடு வேட்புமனுத்தாக்கல் முடிவுக்கு வர இருக்கிறது.

இப்படியான ஒரு அரசியல் சூழ்நிலையில், சென்ற சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியில் இருந்து விலகி விட்ட சூழ்நிலையில், பாஜக கூட்டணி இடப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த கட்சி 25 சதவீத இடங்களை கேட்பதாக செய்திகள் வெளியாகின. ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுக பொறுப்பாளர்களுடன் பாஜகவின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அதிமுக தலைமை அலுவலகத்திலும் வார்டு பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த கூட்டணியில் அதிமுக அதற்கு எத்தனை சதவீத இடங்கள் பாஜகவிற்கு எத்தனை சதவீத இடங்கள் உள்ளிட்டவை இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

இந்த சூழ்நிலையில், பேச்சுவார்த்தை இதுவரையில் முடிவுக்கு வராத நிலையிலேயே நேற்று ஏதேனும் நாளைக்கு மேல திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டது இது மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், உள்ளிட்ட பதவிகளுக்கான அதிமுக வேட்பாளர்களின் முதல் பட்டியல் என்று சொல்லப்படுகிறது. பேச்சுவார்த்தையின் முடிவதற்கு முன்னரே அதிமுக தலைமை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருப்பதால் பாஜக அதிர்ச்சியடைந்து இருக்கிறது. இதன் காரணமாக, பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. இருந்தாலும் சுமுகமான பேச்சு வார்த்தை நடைபெற்று அதில் சுமூகமான முடிவு எட்டப்படும் என்று பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.