Connect with us

Breaking News

நடத்துனர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதை மீறினால் நடவடிக்கை!

Published

on

Important Notice for Conductors! If this is violated, action will be taken!

நடத்துனர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதை மீறினால் நடவடிக்கை!

போக்குவரத்து துறை அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் பேருந்துகளில் மகளிர்களுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்குவதில் நடத்துனர்கள் மற்றும் டிரைவர்கள் தரை குறைவாக பேசுவதாகவும் புகார் எழுதி வந்த நிலையில் தற்போது பயணிகள் மற்றும் பயிற்சிக்கு வரும் ஓட்டுனர்கள் மூலம் எண்ணற்ற புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

Advertisement

மேலும் அந்த வகையில் நடத்துனர்கள் முன்பு இருக்கையில் அமர்ந்து கொண்டு செல்போனில் வலைதளங்களில் வீடியோக்கள் ,புகைப்படங்கள் என பார்த்துக் கொண்டு அல்லது தூங்கிய படியே வருவதாகவும் புகார்கள் வருகின்றது. கண்டக்டர்களுக்கு பகல் பயணத்தின் போது பயணச்சீட்டு வழங்கிவிட்டு பயணிகள் மற்றும் தங்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பஸ்களின் இரு படிக்கட்டுகளும் தங்களது பார்வையின் கட்டுப்பாட்டில் இருக்கும்படி பஸ்ஸின் பின்பக்கத்தில்  அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கையில் இருந்து பணிபுரிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் இரவு நேர நீண்ட தூர வழித்தடங்களில் பயணிகளுக்கு பயண சீட்டு வழங்கிவிட்டு பஸ்ஸின் முன்புறமுள்ள இருக்கையில் அமர்ந்து டிரைவர் விழிப்புணர்வுடன் பஸ்ஸை இயங்கும் வண்ணம் டிரைவரிடம் உரையாடி கொன்டு வரவேண்டும் எனவும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இரவு நேரத்திலும் செல்போனை பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அவ்வாறு இந்த தடையை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement