சிபிஎஸ்சி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்!

0
72

சிபிஎஸ்சி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பள்ளிகள் 10 ஆம் வகுப்பில் கணித அடிப்படை (241) படித்த 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் (041) 2022-23 கல்வியாண்டுக்கு மட்டுமே வழங்க அனுமதித்துள்ளது.

மேலும் நடப்பு கல்வியாண்டு கோவிட் பாதிப்பால் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

மேலும் நிலையான விதியின்படி, கணிதம் தரநிலை (041) படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 11 ஆம் வகுப்பில் கணிதத்தை (041) தேர்வு செய்யலாம். 10 ஆம் வகுப்பில் கணிதம் அடிப்படைப் படிப்பவர்கள் 11 ஆம் வகுப்பில் பயன்பாட்டு கணிதத்திற்கு மட்டுமே செல்ல முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் இந்த விதி தளர்த்தப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக உருவான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இப்போது மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் 10 ஆம் வகுப்பில் அடிப்படை அல்லது தரநிலைக் கணிதம் படித்த அனைத்து மாணவர்களும் உயர்நிலைப் பிரிவில் கணிதம் (042) படிக்கத் தேர்வு செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது.

11 ஆம் வகுப்பில் கணிதம் படிக்க மாணவர்களை அனுமதிக்கும் முன், அந்தப் பாடத்தை எடுத்துக்கொள்வதற்கான திறமை உள்ளதா என்பதை பள்ளித் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று சிபிஎஸ்இ பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

author avatar
Parthipan K