பிளஸ் டூ மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பிப்ரவரி 25 ஆம் தேதி நீங்கள் இங்கு கட்டாயம் செல்ல வேண்டும்!

0
244
Important information released for Plus Two students! You must go here on February 25th!
Important information released for Plus Two students! You must go here on February 25th!

பிளஸ் டூ மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பிப்ரவரி 25 ஆம் தேதி நீங்கள் இங்கு கட்டாயம் செல்ல வேண்டும்!

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த என்எஸ்எஸ் அலுவலர்கள்,பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் உள்பட 600 பேருக்கு இரண்டு நாட்களுக்கு நடைபெறும் உள்ளுரைப் பயிற்சி அதாவது இன்டர்ன்ஷிப் நேற்று சென்னையில் தொடங்கியது.

மேலும் சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்,மாநில ஊராக வளர்ச்சி நிறுவனம், காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய மூன்று இடங்களில் இந்த பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இந்த பயிற்சி குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில்.நடப்பு கல்வியாண்டில் பிளஸ் டூ வகுப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு அவர்கள் பகுதியில் உள்ள கல்லூரிகளில் எந்த அளவில் உயர்கல்வி வாய்ப்புகள் உள்ளது என்பது பற்றியும் ,உயர்கல்விக்கு வழிகாட்டுவது குறித்தும் என்எஸ்எஸ் அலுவலர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு இரண்டு நாட்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது.

மேலும் இந்த பயிற்சியில் பங்குபெறும் ஒவ்வொரு என்எஸ்எஸ் அலுவலரும் தங்கள் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை கண்டறிய வேண்டும். இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ற பத்து முதல் 15 என்எஸ்எஸ் மாணவர்கள் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக நியமிக்கப்படுவர்.

இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 10 மாணவர்கள் அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர்கள். இதன் மூலம் அங்குள்ள உயர்கல்வி வாய்ப்புகள், பட்டப்படிப்புகள் ஆய்வகங்கள்,விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு எந்த மாதிரியான வசதிகள் உள்ளது என அறிந்து கொள்ளலாம்.

அதனால் வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கள் அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K