நாளை முதல்பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! மகிழ்ச்சியில் மக்கள்! பொங்கல் தொகுப்பு டோக்கன் வினியோகம்- ஒரு நாளைக்கு 200 டோக்கன் வழங்க முடிவு

0
210
Important information released by the government about the Pongal gift package! Happy people!
Important information released by the government about the Pongal gift package! Happy people!

பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! மகிழ்ச்சியில் மக்கள்!

தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு அரசு சார்பில் வழங்குவது வழக்கம்.அந்த வகையில் கடந்த ஆண்டு திமுக அரசு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியது.அவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் இருந்த பொருட்கள் அனைத்தும் தரமற்றதாக இருந்தது என பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் எழுந்து வந்தது.

அதனால் நடப்பாண்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.அந்த ஆலோசனை கூட்டத்தில் ரூ 1000 ரொக்க பணம் மற்றும் சர்க்கரை,பச்சரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது .அதன் பிறகு கரும்பு வழங்க வேண்டும் என விவசாயிகளின் தொடர் கோரிக்கைக்கு பிறகு பொங்கல் தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.அதனால் வரும் ஒன்பதாம் தேதி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை  ரேஷன் கடையில் முதல்வர் தொடங்கி வைக்கின்றார்.அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் நாளை முதல் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்பட உள்ளது.

நாளொன்றுக்கு 200 டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.வரும் எட்டாம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள் மற்றும் நேர குறிப்பிடபட்டிருக்கும்.அந்த நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று கொள்ளலாம்.

பொங்கல் பரிசு தொகுப்பில் ஏதேனும் குறைந்திருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்கலாம் என புகார் எண் வழங்கப்பட்டுள்ளது.பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றவுடன் அதுகுறித்து குறுஞ்செய்தி ரேஷன் அட்டை தாரர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
Parthipan K