தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கல்வி துறை வெளியிட்ட முக்கிய தகவல்!  அதற்கான முழு விவரங்கள் இதோ!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கல்வி துறை வெளியிட்ட முக்கிய தகவல்!  அதற்கான முழு விவரங்கள் இதோ!

10  மற்றும் 12 வகுப்புகளுக்கு கடந்த மாதம் 5 ஆம் தேதி தேர்வு தொடங்கிய நிலையில்  இன்று அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.பத்தாம் வகுப்பில் மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.  அதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 ஆகும். பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்வு எழுதியவரின் மொத்தம்  எண்ணிக்கை 9 லட்சம் மாணவர்கள் ,அதில் 8.12 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி  பெற்றுள்ளனர்.

இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் 10 மற்றும்  12  ஆம் வகுப்பில் தேர்வு எழுதாத  மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறுதேர்வு எழுத ஏற்பாடு செயப்பட்டுள்ளது  எனவும் தேர்வு எழுதுவதற்கான  தேதியை பள்ளி கல்வி துறை  வெளியிட்டுள்ளது.10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தொடங்கப்படும் எனவும் ,மேலும்   12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 25 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் எனவும்  பள்ளி கல்விதுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Leave a Comment