தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இங்கு ரயில் சேவை ரத்து!

0
185
Important information released by Southern Railway! Train service canceled here for five consecutive days!
Important information released by Southern Railway! Train service canceled here for five consecutive days!

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இங்கு ரயில் சேவை ரத்து!

தமிழகத்தில் கொரோனா பரவலுக்குப் பிறகு பெரும்பாலானோர் ரயில் சேவையை விரும்புகின்றனர். தெற்கு ரயில்வே பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருகின்றது. மேலும் பண்டிகை தினங்களில் அனைத்து பகுதிகளுக்கும் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வரும் 17ஆம் தேதி முதல் மார்ச் 21ஆம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா விரைவு ரயில் திருநெல்வேலியுடன் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே கூறுகையில் திருநெல்வேலி நாகர்கோவிலில் ரயில் வழித்தடங்களில் உள்ள நாங்குநேரி முதல் மேலப்பாளையம் வரை உள்ள பகுதிகளில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக தாம்பரத்திலிருந்து தினந்தோறும் இரவு 11 மணிக்கு புறப்படும் அந்தியோதயா விரைவு ரயில் மார்ச் 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும்.

மறு மார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்படும் ரயில் மார்ச் 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நாகர்கோவில் திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருநெல்வேலியிலிருந்து மாலை 5.௦5 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் தாம்பரம் சென்றடையும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. திருச்சியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு தினமும் காலை 7.20 மணிக்கு இயக்கப்படும் அதிவிரைவு ரயில் மார்ச் 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படுகின்றது.

மறு மார்க்கமாக திருவனந்தபுரத்திலிருந்து தினமும் காலை 11:35 மணிக்கு இயக்கப்படும் அதிவிரைவு ரயில் திருவனந்தபுரம் திருநெல்வேலி இடையே மார்ச் 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் திருநெல்வேலியில் இருந்து பகல்2.3௦  மணிக்கு இந்த ரயில் புறப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் திருச்சி வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K