குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 உதவித்தொகை குறித்து வெளியான முக்கிய தகவல்! இவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை!

0
230
Important information released about Rs 1000 per month allowance for heads of families! They have no chance!
Important information released about Rs 1000 per month allowance for heads of families! They have no chance!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 உதவித்தொகை குறித்து வெளியான முக்கிய தகவல்! இவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை!

கடந்த தேர்தலின் பொழுது திமுக கட்சியானது பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியது. பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயண சீட்டு வழங்குதல், நான் முதல்வன் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் என்ன பல்வேறு வகையான திட்டங்களை அறிவித்தது.

எதிர்பார்த்தபடி திமுக ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு முதலில் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா  பயணச்சீட்டு வழங்குதல், நான் முதல்வன் திட்டம் போன்றவை அமல்படுத்தியது. ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டமானது தற்போது வரை அமலுக்கு வரவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இம்மாதம் 2௦ ஆம்  தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

மேலும் இந்த பட்ஜெட்டில் கடந்த முறை இடம்பெறாத சில முக்கிய அறிவிப்புகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000, சிலிண்டர் மானியம் ரூ100, மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை, முதியோர் ஓய்வூதியத் தொகை 1500, கல்வித்துறை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வருதல் போன்ற அறிவிப்புகள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ 1௦௦௦ என்பது தற்போது உறுதியாகிவிட்டது. குடும்பத் தலைவிகளுக்கு  மாதம்  ஆயிரம் ரூபாய்  உதவித்தொகை தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என முதல்வர் மு க ஸ்டாலின் சர்வதேச மகளிர் தினத்தன்று தெரிவித்தார்.

இந்நிலையில் மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவர் ஜெ ஜெயரஞ்சன் வருமானவரி செலுத்தும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1௦௦௦ வழங்கப்பட மாட்டாது என தற்போது தெரிவித்துள்ளார். மேலும் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் போது குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து முழுமையாக அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K