மருத்துவ ஊழியர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த கட்டுப்பாடுகளை மீறினால் அன்று உங்களுக்கு விடுமுறை தான்!

0
165
important-information-for-medical-staff-if-you-break-these-restrictions-then-you-are-off
important-information-for-medical-staff-if-you-break-these-restrictions-then-you-are-off

மருத்துவ ஊழியர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த கட்டுப்பாடுகளை மீறினால் அன்று உங்களுக்கு விடுமுறை தான்!

அரியானா மாநிலம் சுகாதார அமைச்சர் கூறுகையில் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு என ஆடை கட்டுப்பாட்டு விதிமுறை இறுதி கட்டத்தில் உள்ளது.மருவத்துவமனையில் பணியில் இருக்கும் ஊழியர்கள் 24 மணி நேரமும் இந்த ஆடைக் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும்.வார இறுதிகள்,மாலை மற்றும் இரவு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இதில் விதிவிலக்கு கிடையாது.மேலும் ஊழியர்கள் இந்த கட்டுப்பாடுகளை மீறினால் அவர்களுக்கும் அன்று பணிக்கு வரவில்லை என பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி வினோதமான முடி அலங்காரம், அதிக அளவில் நகை மற்றும் அணிகலன்கள், ஒப்பனை அணிவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி நகங்களை நான்கு வெட்டி சுத்தமாக பாராமரிக்க வேண்டும். ஊழியர்கள் அணிந்திருக்கும் காலணிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். மருத்துவமனையில் பணி புரியும் பெண் ஊழியர்கள் குட்டை பாவாடை, கையில்லாத மேலாடை போன்றவற்றை அணியக்கூடாது.அதனையடுத்து டெனிம் தோல் ஆடைகளுக்கு அனுமதியில்லை.

ஊழியர்கள் அனைவரும் சுத்தமான ஆடையில் தங்களின் பெயர்,பணி குறித்த பட்டியை அணிந்திருக்க வேண்டும்.பொதுமக்களிடம் ஒரு நல்ல மதிப்பினை உருவாக்கும் விதமாக இந்த ஆடைக் கட்டுப்பாட்டு கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.பாதுகாவலர்கள் டிரைவர்கள் சமையலர்கள் உள்பட மருத்துவமனையில் அனைத்து பிரிவு ஊழியர்களும் முறையான சீருடையில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K