Connect with us

Breaking News

பிரதமரின் வீட்டு வசதி திட்டம் குறித்த முக்கிய தகவல்! நீதிமன்றம் போட்ட 6 மாத கால அவகாசம்!

Published

on

Important information about Prime Minister's housing scheme! The 6-month period set by the court!

பிரதமரின் வீட்டு வசதி திட்டம் குறித்த முக்கிய தகவல்! நீதிமன்றம் போட்ட 6 மாத கால அவகாசம்!

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது அவ்வாறு வழங்கப்படும் வீடுகள் முறையாக ஏழை எளிய மக்களுக்கு சென்றடையாமல் அந்த கிராமத்தில் உள்ள வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு பெரும்பாலும் சென்றடைகிறது.

Advertisement

இவ்வாறு அரியலூர் மாவட்டத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வேலை எளிய மக்களுக்கு வழங்க வேண்டிய வீடுகள் ஒரு நபருக்கு மட்டும் இரண்டு மூன்று என்ற கணக்கில் கொடுக்கப்பட்டுள்ளது அடுத்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில், மனுதாரர் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய வீடுகள் அரசு வேலையில் இருப்பவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அந்தந்த மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகள் வரும் பணத்தை எடுத்துக் கொள்வதாகவும் எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

இது குறித்து தமிழக அரசு சார்பில் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் செயலாளர்களிடம் புகார் குறித்து விளக்கம் அளிக்க கோரி உத்தரவிட்டுள்ளது. எனவே நீதிமன்றம் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என்று தெரிவித்தனர்.

தற்பொழுது பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பல புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது எனவே இது குறித்து தீவிரமாக நடவடிக்கை எடுப்பதோடு அந்தந்த ஊரக வளர்ச்சி துறை செயலாளர்கள் எதிர் தரப்பினராக சேர்க்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

Advertisement

அதேபோல தகுதியற்றவர்களுக்கு வீடு வழங்கியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்திலும் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் சரியான முறையில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளதா, என்று கண்காணிப்பதோடு தேசிய காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நிதியை கைப்பற்றிது குறித்தும் கண்காணிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர் சரியான முறையில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

மேலும் கண்காணிப்பு நடத்தப்படும் அறிக்கையை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், ஊரக வளர்ச்சி துறை செயலாளர் இடம் அறிக்கையாக தாக்கல் செய்வதோடு ஆறு மாதங்களில் இதனை முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறி உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement