கடும் வெயிலுக்கு மத்தியில் தமிழகத்தில் இன்று மழை பெய்யவிருக்கும் பகுதிகள்!

0
65

தமிழ்நாட்டில் தற்சமயம் கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டது இதன் காரணமாக, வெயில் வாட்டி வதக்கி வருகின்றது.அதோடு வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பலர் அவதியுற்று வருகிறார்கள். வேலைக்கு செல்பவர்களும், தினக்கூலி வேலைக்கு செல்பவர்களும், விவசாய பணிகளுக்கு செல்பவர்களும், இந்த வெயிலின் காரணமாக, கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.

வழக்கமாக சித்திரை மாதத்தில் தான் இப்படி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் ஆனால் இந்த வருடம் தற்போதே வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்து வருவதால் பொதுமக்கள் வெகுவாக கவலை கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வெப்பத்தை தனித்து வருவதாக சொல்லப்படுகிறது. கடந்த வாரம் வரையில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ததாக சொல்லப்படுகிறது.

அத்துடன் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் உள்ளிட்டவை காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் இன்றும், நாளையும், ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.