முழுநேர அரசியலில் குதித்த நடிகை ராதிகா சரத்குமார்! உற்சாகத்தில் தொண்டர்கள்!

0
80

நடிப்பிலிருந்து விலகி அரசியலில் ஈடுபட உள்ளதாக பிரபல நடிகையும், நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அவர்களின் மனைவி ராதிகா தெரிவித்திருக்கிறார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இருக்கின்ற மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேலூர் மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார், மற்றும் மாநில மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் போன்றோர் பங்கேற்றார்கள் .

அந்த சமயத்தில், உரையாற்றிய நடிகர் சரத்குமார் புரட்சிக்கு பெயர் போன ஊர் என்றால் அது வேலூர் தான் இந்த வேலூரில் தேர்தலின் முதல் ஆலோசனை கூட்டத்தை ஆரம்பித்துவிடுகிறோம். சென்ற 14 வருடங்களாக ஜாதி மதம் இல்லாமல் கட்சியை வழிநடத்தி வந்திருக்கிறோம்.

எதையாவது சாதிக்க வேண்டும் என்று சொன்னால் ,உழைப்பு, நம்பிக்கை உறுதி போன்றவை நம்மிடம் இருக்க வேண்டும். யாராவது பணம் கொடுத்தால் அதை வாங்கி விடாதீர்கள் நீங்கள் ரசிகர்களாக இருந்தது போதும், இனி எதிர்காலத்தில் அரசியல்வாதியாக அவதாரம் எடுங்கள் அப்படி எடுத்தால் தான் மக்களுக்கு சேவை செய்ய இயலும் என்று தெரிவித்தார்.

சரத்குமாரை அடுத்து உரையாற்றிய அந்த கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் ஆன நடிகை ராதிகா தலைவர் பழகுவதற்கு இனிமையானவர், மிகவும் எளிமையாக இருக்கக்கூடியவர், யாரேனும் உதவி என்று கேட்டு வந்தால் உடனடியாக ஓடிச் சென்று உதவி செய்வார் அதனால் தான் அவர் எல்லோராலும் ரசிக்கப்படும் ஒரு தலைவராக இருந்து வருகிறார். என்று தெரிவித்தார் ராதிகா சரத்குமார்.

இதுவரையில் தலைவர் யாரிடமும் ஜாதி மதம் பார்த்து பழகியது கிடையாது. நான் தற்சமயம் ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறேன் நான் கொஞ்ச காலம் நடிப்பதில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கிறேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார். அவருடைய இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து கட்சியின் நிர்வாகிகளும் ,தொண்டர்களும் உற்சாகப்படுத்தினார்கள்.