அவரை சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்! பிரதமர் நரேந்திர மோடி!

0
62

இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, உள்ளிட்ட 4 நாடுகள் ஒன்றிணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கினர்.இந்த அமைப்பின் முதல் மாநாடு சென்ற வருடம் காணொளி காட்சியில் முகமாக நடைபெற்றது.

இந்தநிலையில், இந்த வருடம் நோய்த்தொற்று பரவல் குறைந்து காணப்படுவதால் இந்த 4 நாட்டின் தலைவர்களும் நேரடியாக சந்தித்து இந்த மாநாட்டை நடத்தவிருக்கிறார்கள்.

இந்தநிலையில், இந்தோ பசுபிக் பிராந்திய வளர்ச்சிக்கு குவாட் மாநாடு உதவியாக இருக்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

இந்த அமைப்பின் மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளையதினம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஜப்பானுக்கு நேற்று இரவு பிரதமர் நரேந்திரமோடி புறப்பட்டுச் சென்றார்.

ஜப்பானில் 24 மணிநேரம் தங்கியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி குவாட் மாநாடு உட்பட சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என சொல்லப்படுகிறது.

அவர் ஜப்பான் புறப்படுவதற்கு முன்பாக வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இந்த மாநாட்டில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் பிரதமர்களுடனும் மற்றும் அமெரிக்க அதிபர் உடனும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறேன்.

இதன்காரணமாக, அந்த நாடுகளுடனான உறவு மேலும் வலுப்படும் என நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு ஆபத்து இருக்கிறது இது குறித்து இந்த மாநாட்டில் தீவிரமாக ஆலோசிக்கப்படும் சர்வதேச பிரச்சினைகள் தொடர்பாகவும் மாநாட்டில் விவாதிக்கப்படும்.

டெல்லியில் சென்ற மார்ச் மாதத்தில் இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஜப்பான் பிரதமர் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு ஜப்பானுக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுத்தார் என தெரிவித்திருக்கிறார்.

அதேபோல ஜப்பான் செல்லும் நான் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக உரையாற்றுவேன் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற ஆண்டனி அல்போன்ஸ்க்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரைச் சந்திப்பதில் நான் ஆர்வமாக இருக்கிறேன் என்றும், அந்த அறிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.