எங்களை முடக்க நினைத்தால் நாங்கள் மாற்று வழிகளை யோசிப்போம்: – ரஷியா!

0
75

எங்களை முடக்க நினைத்தால் நாங்கள் மாற்று வழிகளை யோசிப்போம்: – ரஷியா!

உக்ரைன் மீது ரஷிய ராணுவம் தொடுத்துள்ள போர் இன்று 15-வது நாளை எட்டி உள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் ரஷியாவின் கச்சா எண்ணெய் விற்பனை சந்தையையும் முடக்கி உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து ரஷியாவின் கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-

ரஷியாவின் கச்சா எண்ணெய் விற்பனையை முடக்குவதன் மூலம் உலக சந்தை பெரும் பாதிப்பை சந்திக்கும். இந்த பாதிப்பு மேற்கத்திய நாடுகளிலும் எதிரொலிக்கும். எங்களை முடக்க நினைத்தால் நாங்கள் மாற்று வழிகளை யோசிப்போம். கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதன் விளைவுகள் என்னவாகும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ரஷியா என்ன செய்யப் போகிறது என்பதை உலகமே கவனித்து கொண்டிருக்கிறது. உலக நாடுகள் மத்தியில் ரஷியா, தனது நலனையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். இதற்காக ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பதை தள்ளிவைக்க வேண்டும். ரஷியா மீது அமெரிக்கா நேரடி போரை நடத்துவதற்கு பதில் பொருளாதார போரை நடத்துகிறது. இதனை அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

உலக சந்தையில் ரஷியாவின் பண பரிமாற்றத்தை முடக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும். இது மேற்கத்திய நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்கா இதனை உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

author avatar
Parthipan K