இந்த டிகிரி படித்தால் மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை பெறலாம்!

0
53

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாக ஆகஸ்ட் 31ஆம் தேதி முடிவடைகிறது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆண்டுதோறும் பட்டப்படிப்புக்கான எம். ஏ தமிழ், எம்.ஃபில் தமிழ், ஒருங்கிணைந்த முதுகலைத் தமிழ் (5yr. Integ. P.G Tamil) ஆகிய பட்டப் படிப்புகளுக்கான உப்புகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் இந்த 2020-2021ஆம் வருட கல்வியாண்டில் இந்த பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை எனது விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஆய்வியல் தமிழ் பட்டப்படிப்பு(M.Phil) – 4,600 ரூபாய், ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்பு (Integ. PG Tamil) – 2,400 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. முதுகலை படிப்புக்கு கட்டணம் இல்லை.

சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையதளம் வாயிலாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம், அல்லது அஞ்சலகம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் சேர்க்கை பற்றிய விவரங்களை அறிய http://www.ulakaththamizh.in/ என்ற இணைய முகவரியினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதில் தமிழ் முதுகலைப் படிப்பில்(PG Tamil) சேரும் விரும்பும் மாணவர்களுக்கு தமிழக அரசு 15 மாணவர்களுக்கு உதவித் தொகையாக மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

author avatar
Parthipan K