நிச்சயமாக வெற்றி பெற்றாக வேண்டும்! இதற்காக எதையும் செய்யத் துணிந்த எதிர்க்கட்சித் தலைவர்!

0
88

தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது ஆனால் அந்த சமயத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சமீபத்தில் இந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்தது. அதன்படி சென்ற 15-ஆம் தேதி இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற்றது.

இப்படியான சூழ்நிலையில், இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் முடிவுற்று தேர்தல் பரப்புரையில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சியினர் மிகவும் தீவிரமாக இறங்கி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கின்ற ஊரக பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யாமல் வீட்டில் இருக்கக்கூடிய பெண்களை கவரும் விதத்தில் அரிசி மூட்டை, குத்துவிளக்கு, மூக்குத்தி வெள்ளி விளக்கு, சிறிய அளவிலான மிக்ஸி என்று அதிமுகவினர் தங்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு பரிசு பொருட்களை அள்ளி வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் பிரச்சாரத்திற்கு வாக்கு சேகரிக்கும் வேலையில் ஈடுபடுபவர்களுக்கு சாப்பாடு உள்ளிட்டவற்றை போட்டு ரகம் ரகமாக மதுபான பாட்டில்களும் வழங்கப்படுகிறது. மதுசாப்பிடாதவர்களுக்கு பணம் வழங்கப் படுகின்றது. ஒருசில மாவட்டங்களில் எடப்பாடி ஒரு வீட்டில் மூன்று அல்லது ஐந்து ஓட்டுகள் இருந்தால் தங்கச் சங்கிலி மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல் போன் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுக்கிறோம் என வாக்குறுதி கொடுத்து அசத்தி இருக்கிறார் என சொல்லப்படுகிறது.

எப்படியாவது சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று எதிர்பார்த்திருந்தார் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. கடுமையான போட்டி நிலவிய போதிலும் அறுபத்தி ஆறு இடங்களில் வெற்றி அடைந்தது அதிமுக. அந்த நேரத்தில் அது அதிமுகவிற்கு மிகப்பெரிய தோல்வி கிடையாது திமுக வென்ற பின்னர் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொள்ள துணிந்து இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும். அதன் மூலமாக தன் பலத்தை நிரூபிக்க இயலும் என எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டிருக்கிறார். அதற்காக அதிமுக பணத்தை வாரி இறைத்துக்கொண்டு இருக்கிறதாம்.

அதேநேரம் ஆளும் கட்சியான திமுக இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெற வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறது. ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய திமுகவின் பலம் ஆள் பலம் மற்றும் அதிகார பலத்தை தாண்டி அதிமுக இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றால் அது மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படும். ஆனாலும் வெற்றி யார் பக்கம் என்பது தேர்தலின் முடிவில் தான் தெரியவரும்.