தானாக வங்கிகளே முன்வந்து வழங்கும் கடனை பெறலாமா? வட்டி விகிதம் எவ்வாறு இருக்கும்?

0
81

இதற்கு முன் கடனை முறையாக திருப்பி செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு மறுபடியும் கடன் வழங்குவதற்கு வங்கிகள் எப்போதும் ஆர்வமாக இருக்கின்றன முன்பே ஒப்புதல் வழங்கப்பட்ட கடன் திட்டங்களும் இந்த வகையை சார்ந்தவை தான். ஆகவே தீர்மானிக்கப்பட்ட சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு கடனை திருப்பி செலுத்தும் தங்களுடைய தகுதிக்கு தகுந்தாற் போல வழங்கப்படுவது தான் இந்த ஃப்ரீ அப்ரூவ்டு எனப்படும் ஒப்புதல் அளிக்கப்பட்ட கடனாகும்.

கடன்களில் இரண்டு வகை இருக்கிறது முதலில் பாதுகாப்பு உத்தரவாதம் கொண்ட கடன் அதாவது தங்களுடைய வீடு,வாகனம் போன்றவற்றிற்காக வழங்கப்படும். கடன் 2வது பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாத கடன் அதாவது தங்களுக்கான தனிநபர் கடன் கிரெடிட் கார்டு போன்றவை இந்த 2ம் வகையை சாரும் என்கிறார்கள்.

பொதுவாக வங்கிகளுடன் நீண்ட கால பந்தத்தில் இருக்கின்ற வாடிக்கையாளர்கள் முன்பே ஒப்புதல் வழங்கப்பட்ட கேடீன் பெறுவதற்கு அதிக விருப்பம் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக பஜாஜ் பின்சர் நிறுவனத்தின் இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், ஏற்கனவே ஒரு நிதி அமைப்பிடமிருந்து கடன் பெற்று அதனை முறையாக திருப்பி செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு இது போன்ற ஒப்புதல் அளிக்கப்பட்ட கடன் வழங்கப்படுகிறது.

அதேநேரம், இந்த கடன் வழங்கப்படுவதற்கு முன்பாக வாடிக்கையாளர்கள் கடனை திருப்பி செலுத்தும் திறன் மற்றும் அவர்கள் மீதான நம்பகத்தன்மை முழுமையாக ஆய்வு செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒப்புதல் வழங்கப்பட்ட கடன் என்றால் தங்களுக்கு அது கட்டாயம் வழங்கப்படும் என்று அர்த்தம் இல்லை. தங்களுக்கு கடன் வழங்கப்படலாம் என்ற சலுகை மற்றும் நீங்கள் அதனை பெறுவதற்கான தகுதியை கொண்டுள்ளீர்கள் என்பதை உணர்த்தும் செய்தி மட்டும் தான்.

இதற்கு அடுத்தபடியாக வழக்கமான கடன் பெறுவதற்கு மேற்கொள்ளப்படும் அனைத்து நடைமுறைகளில் இதிலும் கடைபிடிக்கப்படும் என்று பேங்க் பஜார் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஆதில் செட்டி தெரிவித்திருக்கிறார்.

ஆனால் வங்கியுடன் ஆன நீண்டகால பந்தம் மற்றும் வாடிக்கையாளர்களின் நல்லெண்ண நடவடிக்கை உள்ளிட்டவற்றின் காரணமாக, கடன் ஒப்புதல் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் வழக்கமாக பெறும் அதே கடன் திட்டங்களை போலவே இங்கும் வட்டி மற்றும் பிராசசிங் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனாலும் இது ஒரு விளம்பரம் அல்லது சலுகை திட்டம்.

ஆகவே தங்களுக்கு வட்டி மற்றும் பிராசசிங் கட்டணத்தில் டிஸ்கவுண்ட் வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த கடன் சலுகையை நீங்கள் ஏற்றுக்கொள்வதற்கான காலவரம்பும் இருக்கிறது. உதாரணத்திற்கு வீட்டு கடன் என்றால் 6 மாத கால அவகாசம் வழங்கப்படும்.

ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்டது என்பதால் ப்ராசசிங் காலம் மற்றும் வட்டி விகிதம் உள்ளிட்டவை குறைவாக இருக்கலாம். ஆனால் வீடு அல்லது கார் வாங்க வேண்டும் என்பது போன்ற தேவைகள் எதுவும் இல்லாமல் சலுகை கிடைக்கிறது என்பதற்காக மட்டும் கடன் வாங்க வேண்டாம்.