அரசு பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு வேலை!!! கல்வித்துறை அமைச்சர் அதிரடி!!

0
112

தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களே தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன் வருவதில்லை. இதற்கு காரணமாக கருதப்படுவது அரசு பள்ளிகளின் தரம் மற்றும் வசதியின்மையே ஆகும்.

ஆனால் சமீபகாலமாக தமிழகம் உள்பட அனைத்து பல மாநிலங்களில் அரசு பள்ளிகள் நவீன மயமாக்கப்பட்டு வருவதால் அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இருந்தபோதிலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவாக இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை முன்வைத்து “ஜார்கண்ட் மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மதோ அவர்கள்
அரசு பள்ளியின் தரத்தை நிலைநாட்ட அரசு பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு வேலை என சட்டத்தை கொண்டு வரவேண்டும் என அதிரடியாக கூறியுள்ள”இந்த அறிவிப்பு
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்தாக இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கூறியிருப்பதாக தெரிகிறது.
இருப்பினும் இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்ட பின்னரே இந்த திட்டத்தை சட்டமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் அமைச்சர் ஜகர்நாத் மதோ பேசுகையில் தனியார் பள்ளிகளில் படித்து விட்டு அரசு பணிக்கு மக்கள் எதிர்பார்ப்பது நியாயமில்லை என்றும் அரசாங்க வேலை வேண்டும் என நினைத்தால் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்றும் அவர் கூறியது அம் மாநில மக்களிடையே இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Pavithra