நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! ஈடேறுமா முன்னாள் அமைச்சரின் எண்ணம்?

0
86

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் ஆரம்பித்துவிட்டது, டிசம்பர் மாதத்தின் இறுதியிலோ அல்லது ஜனவரி மாதத்தில் தொடக்க காலத்தில் தேர்தல் நடைபெறலாம் என்று சொல்லப்படுகிறது. அதோடு மேயர் நகராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், மூலமாக தேர்ந்தெடுக்கும் நடைமுறை தற்சமயம் இருந்து வருகிறது. பழைய முறையை படி மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் நடைமுறை கொண்டுவரப்படுமா? என்ற கேள்வி தற்சமயம் இருந்து வருகிறது,தமிழக அரசின் இந்த முடிவை அறிவதற்காக மாநில தேர்தல் ஆணையம் காத்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கிறது.

இதற்கிடையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகிறார்கள், அதிலும் குறிப்பாக ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய திமுகவில் தேர்தலுக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள். அதோடு விட்டதை பிடிக்கும் விதத்தில் ஒரு சிலர திமுகவைச் சேர்ந்தவர்கள் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள், அதில் நாகர்கோவிலை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் அவர்களும் ஒருவர் கடந்த 1996 மற்றும் 2006 உள்ளிட்ட இரண்டு முறையும் கருணாநிதியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அவர் சு தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சராக அமர்ந்திருக்க கூடியவர் அதுவும் மூத்த அமைச்சர் என்ற அந்தஸ்தும் அவருக்கு கிடைத்திருக்கும்.

ஆனாலும் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் காந்தியிடம் சுரேஷ்ராஜன் தோல்வியை சந்தித்தார். கட்சி ஆட்சிக்கு வந்தும் சட்டப்பேரவைக்கு செல்ல இயலவில்லை, அமைச்சரும் ஆக முடியவில்லையே என்ற ஆதங்கம் அவருக்கு மட்டுமல்லாமல் அவருடைய ஆதரவாளர்களும் இருந்திருக்கிறது இந்த நிலையில், விட்டதை பிடிக்கும் முயற்சியில் சுரேஷ்ராஜன் ஈடுபட்டிருப்பதாக கன்னியாகுமரி மாவட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்சமயம் நாகர்கோவில் மாநகராட்சி ஆக உள்ளது ஆனால் இதுவரையில் தேர்தல் நடை பெறாமல் இருப்பதால் அந்த மாநகராட்சியின் முதல் மேயர் பதவியை கைப்பற்ற பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், உள்ளிட்ட தேசிய கட்சிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பாஜக சார்பாக முன்னாள் நகராட்சி தலைவர் மீனாதேவ் போட்டியிடுவார் என இப்போதே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சட்டசபை தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் தோல்வியடைந்ததால் மாநகராட்சி யாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார்கள் திமுகவைச் சார்ந்த உடன்பிறப்புகள், இதே எண்ணத்தில் தான் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆகவே மேயர் தேர்தலில் தன்னுடைய மனைவி பாரதியை களமிறக்கும் பணிகளை சுரேஷ்ராஜன் முன்னெடுத்து இருப்பதாக திமுகவின் வட்டாரங்களில் சொல்லப்பட்டு வருகிறது. இது குறித்து சுரேஷ்ராஜன் திமுக தலைமையிடம் பேசி விட்டதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இதனுடைய எதிரொலியாக சுரேஷ் ராஜனின் மனைவி பாரதியை தற்சமயம் பொது நிகழ்ச்சிகளிலும் அதிகமாக பார்க்க முடிகிறது. தேர்தலை மனதில் வைத்து தான் இது போன்ற நிகழ்வுகள் நடக்கிறது என்று கன்னியாகுமரி மாவட்ட உடன்பிறப்புகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள்.

இருந்தாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது அந்த கட்சியும் மேயர் பதவியை எதிர்பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது, இதையெல்லாம் தாண்டிதான் சுரேஷ்ராஜன் தன்னுடைய மனைவியை மேயராக்க இயலும் என்பதே எதார்த்தமான உண்மை சுரேஷ்ராஜன் எண்ணம் ஈடேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.