சிங்கம் பதுங்குதுனா அது பாயத்தான்.!அமைதியா காத்திருந்து வேட்டையாடும்!! அதுபோலத்தான் அதிமுக ஆட்சியில்!

0
76
-lion-is-hiding-it-is-a-bait-silence-is-waiting-and-hunting-similarly-in-the-aiadmk-regime
-lion-is-hiding-it-is-a-bait-silence-is-waiting-and-hunting-similarly-in-the-aiadmk-regime

சிங்கம் பதுங்குதுனா அது பாயாத்தான்.!அமைதியா காத்திருந்து வேட்டையாடும்!! அதுபோலத்தான் அதிமுக ஆட்சியில்!

அதிமுக பொதுக்குழுவிற்கு வந்த ஓ பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் அவரை அவமதித்தனர்.முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஓ பன்னீர்செல்வம் முகத்தை கூட திரும்பி பார்க்காமல் அவரை கண்டுகொள்ளாமல் சென்றனர்.அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள், மோதல்கள், போராட்டங்களுக்கு இடையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் சற்று நேரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்திற்கு வர ஆரம்பத்திலிருந்தே ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒரு சிறிய வரவேற்பு கூட கிடைக்கவில்லை.

ஓ.பன்னீர்செல்வம் வந்த போது அவரை சாலையில் வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் என ஆட்கள் யாரும் இல்லை. சாலையில் எடப்பாடிக்கு கொடுக்கப்பட்டதுபோல ஓ பன்னீர்செல்வத்திற்கு யாரும் வரவேற்பு கொடுக்கப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த ஓ பன்னீர்செல்வம் வேறு டூட்டில் வந்தார். அண்ணா நகர் வழியாக ரூட் மாறி பன்னீர்செல்வம் வந்தார்.பன்னீர்செல்வம் உள்ள வந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் அவரை எதிர்த்தனர்.

அவரின் காரை கூட உள்ளே நிறுத்த விடவில்லை. நீ அதிமுக ஆட்சி இல்லை என்று கூறி கேட்ட வார்த்தைகளை பயன்படுத்தி அவரை நோக்கி கத்தி முழக்கமிட்டனர். அதோடு ஓ.பன்னீர்செல்வத்தை நீ வெளியில் போயிடு .. உள்ளே மேடைக்கு வராதே என்று கூறி மோசமாக கோஷம் எழுப்பினர். இதனால் பார்கிங்கில் சில சலசலப்பு ஏற்பட்டன.இந்த பிரச்னையை கடந்து மண்டபம் உள்ளே வந்தார் ஓபிஎஸ். அங்கு நிர்வாகிகளை வரவேற்க வேலுமணி, சி வி சண்முகம் ஆகியோர் அமர்ந்து இருந்தனர்.

ஓபிஎஸ் வந்ததும் சட்டென வேலுமணி முகத்தை சுழித்து திருப்பிக்கொண்டார். ஓபிஎஸ் முகத்தை கூட பார்க்காமல் எடப்பாடி ஆதரவாளர்கள் மாஜிக்கள் முகத்தை திருப்பிக்கொண்டனர். இதனால் அங்கு ஓபிஎஸ் அவர்களை வரவேற்க ஆதரவு யாருமில்லை.அதன்பின் உள்ளே சென்ற ஓபிஎஸ்ஸுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. ஓபிஎஸ் வெளியேற வேண்டும் அதிமுக கட்சிகளின் இவருக்கு இடமில்லை என்று கூறி எடப்பாடி ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர்.

ஓபிஎஸ்யை கண்டுகொள்ளாத இபிஎஸ் ஆதரவாளர்கள் மேடையில் அமர்ந்து இருந்த நிலையில் கீழே இருந்த ஆதரவாளர்கள்.ஹே நீ யார் மேடை ஏறாதே வெளியே போ இங்கிருந்து சென்று விடு என்று கூறி கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கும் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.இதனால் தொடக்கத்தில் இருந்து ஓபிஎஸ்ஸுக்கு தர்மசடங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. அவரை சொந்த கட்சி உறுப்பினர்களே அவரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுக்குழு மூலம் ஆரோக்கியமான விவாதம் நடக்கும். நிர்வாகிகள் சந்தித்துக்கொள்வார்கள். அவர்களிடம் மனஸ்தாபம் தீரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்படி அமைதியான சூழ்நிலை எதுவும் ஏற்படாமல் மூன்று முறை முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம் அவரை அவமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிங்கம் போல் நாட்டை ஆண்டு வந்து எழி போல் ஆனது இதுவா தான் இருக்கும்.இதற்கிடையில் பொதுமக்கள் தான் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து கொண்டு வருகின்றனர். இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டு வந்தால் அதிமுக கட்சி என்ன நிலை ஆகும் என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

author avatar
Parthipan K